அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

increase salary Imran Maharoof
By Vanan Oct 17, 2021 01:12 AM GMT
Report

தற்போது தாங்க முடியாத அளவு அதிகரித்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ( Imran Maharoof) தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் படும் கஷ்டங்களை அவதானிக்கும் போது அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் வாழ்க்கைச் செலவுச் சுமையை ஓரளவுக்கேணும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும்.

சமுகத்தில் கௌரவத்தோடு வாழும் அவர்கள் தங்களது அந்தஸ்தை இழக்கும் நிலையை உருவாக்கி விடாதிருக்க அரசு இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்திலும் கணிசமான அதிகரிப்புச் செய்யப்பட வேண்டும். சமுர்த்தி உள்ளிட்ட சகல அரச கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்கள் கடன் இன்றி உண்ணும் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.

மக்களுக்காகத் தான் அரசு இருக்கின்றது. எனவே, மக்களின் நலன் பேணும் விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசைக் கொண்டு நடத்த நிதி இல்லை என்பதற்காக சகல பொருட்களினதும் விலைவாசியை கண்ணை மூடிக் கொண்டு உயர்த்தி மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது.

இதிலிருந்து மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. எரிவாயு உள்ளிட்ட சில பொருட்களின் விலை 100 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத ஒரு மோசமான விலை அதிகரிப்பு இதுவாகும். இந்த நிலையில் நாடு தான் முக்கியம், மக்கள் முக்கியமல்ல என்ற போர்வையில் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.

மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

69 இலட்சம் மக்கள் ஆணை கொடுத்து தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று இந்த மக்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களது நலன் பேணும் நடவடிக்கைகளே இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இப்போது அரசு அபிவிருத்தியைப் பற்றிப் பேசுகின்றது. மக்களைப் பட்டினி போட்டு விட்டு செய்யப்படும் அபிவிருத்தி தேவையா அல்லது மக்களின் வாழ்க்கைச் செலவை சீர்செய்ய நடவடிக்கை எடுத்து விட்டு செய்யப்படும் அபிவிருத்தி தேவையா என்பது குறித்து கேட்க விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026