மற்றுமொரு கட்டண அதிகரிப்புக்கு மீண்டும் கோரிக்கை
train
increase
ticket
By Sumithiran
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து அனைத்து பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்வடைவதால் மக்கள் தமது நாளாந்த வாழ்க்கைச் செலவிற்கே அல்லல்படுகின்றனர்.
இந்த நிலையில் நாளை(14) நள்ளிரவு முதல் நாளை(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சிடமிருந்து ஆலோசனை பெற்று, தமது கோரிக்கையை நிதி அமைச்சிடம் முன்வைக்கவுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி