13 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டு திட்டம்
Ministry of Health Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
Disease
By Sindu
நாட்டின் 13 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகரித்த பூச்சியியல் தரவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அப்பிரிவின் பதில் பணிப்பாளர், வைத்தியர் கபில கன்னங்கரா தெரிவித்தார்.
79 மரணங்கள் பதிவு
இந்த சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு இயக்கம் நவம்பர் 09 முதல் நவம்பர் 14 வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை, நாடு முழுவதும் சுமார் 105,500 டெங்கு பாதிப்புகளும், 79 டெங்கு தொடர்பான மரணங்களும் பதிவாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |