அமெரிக்காவில் மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான ஜெட்: 9 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அகஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு நேற்று மாலை (அந்நாட்டு நேரப்படி) சிறிய ரக ஜெட் விமானமொன்று புறப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான அந்த ஜெட் விமானத்தில் 9 பேர் பயணித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த ஜெட்
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் கிறிஸ்த்வென் பகுதியில் உள்ள வான்பரப்பில் சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் விமானம் அதிவேகமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் ஜெட் விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |