மட்டக்களப்பில் டெங்கு அச்சுறுத்தல்!! இருவர் உயிரிழப்பு
Batticaloa
Dengue Prevalence in Sri Lanka
By Vanan
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த இரு வாரங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு கருவப்பெண் கேணி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவரும், திராய்மடு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவருமே டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதார நடைமுறைகளை பேணி நீர் தேங்கும் இடங்களில் டெங்கு நுளம்புகளை தடுப்பதற்கு ஏற்றவாறு செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்