டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு
இலங்கையில், டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நுளம்பு பெருகும் அபாயம்
இலங்கையில் மழையுடனான வானிலை நிலவுவதால் நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டார்.
இது சிறந்த நிலைமையொன்று அல்ல என சுட்டிக்காட்டிய அவர், இதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
டெங்கு பரவல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.