யாழில் கடமைகளில் இருந்து விலகிய டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள்
Jaffna
Sri Lanka
Dengue Prevalence in Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கையளிக்கப்பட்டது.
தொழில்சார் சிக்கல்கள்
நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 1ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை இலங்கையில் தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி