காவல்துறை மா அதிபரின் சேவை நீடிப்பு : வெளியான தகவல்
இலங்கையின் தற்போதைய காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மூன்றாவது தடவையாகவும் சேவையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதுடன், கடந்த நவம்பர் 03 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த சேவை நீடிப்பு 03 வாரங்களுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை 04 தடவைகள் அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திரு.சி.டி.விக்ரமரத்னவின் சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்க மறுத்தமையினால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடி நிலை
இந்த நிலையில் அரசியலமைப்பு சபையில் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடிய போது காவல்துறை மா அதிபரின் சேவை நீடிப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் நீடிப்பு வழங்கப்படுவதா அல்லது இந்த சேவை நீடிப்பின் பின்னர் புதிய காவல்துறை மா அதிபர் நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதவிக்கு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் பலர் இருந்தும், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் பெயரை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பரிந்துரைத்துள்ளமையால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 18 மணி நேரம் முன்