காவல்துறை மா அதிபரின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Police
Sri Lanka
By Beulah
காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காவல்துறை மா அதிபரின் பதவிக்காலம் கடந்த ஜூன் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வருகின்ற குற்றச்செயல்களுக்கு மத்தியில் காவல்துறை மா அதிபரின் அவசியப்பாடு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பதவி நீடிப்பு
இதன் பின்னணியிலேயே சி.டி விக்ரமரத்னவின் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
இதற்கமைவாக தற்போது காவல்துறை மா அதிபரின் பதவிக்காலம் மேலதிகமாக மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்