இந்திய முட்டைகளுக்கு மறுக்கப்பட்டது அனுமதி
இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ச்சியாக காணப்படுவதாலேயே அனுமதி மறுக்கப்படுவதாக அவர் காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
முட்டை இறக்குமதி
சுகாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தொழில்நுட்ப அனுமதி வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
சுகாதார ஆலோசனைக் குழு அறிக்கையின்படி, ஒக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை ஐரோப்பாவில் 2,500 பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன, மேலும் 2006 முதல் அவ்வப்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்
2022 ஒக்டோபர் 16 அன்று, இந்தியாவின் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பதிவாகியிருந்த நிலையில், அங்கு பறவைக்காய்ச்சல் அவ்வப்போது பதிவாகி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்