டென்மார்க்கில் வெளிநாட்டு அமைச்சை முற்றுகையிட்ட தமிழர்கள்

tamil protest denmark peopl
By Vasanth Jan 19, 2021 03:50 AM GMT
Report

கொரோனா இடர்பாடுகளுக்கு மத்தியிலும் டென்மார்க் வாழ் தமிழ் மக்கள், டென்மார்க் காவல்துறை மற்றும் வெளிநாட்டமைச்சின் சிறப்பு அனுமதியுடன், ஈழத்தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை உணர்வுபூர்வமாக மேற்கொண்டனர்.

டென்மார்க் தலைநகரில் இந்த கவனயீர்ப்பு வாகன பேரணி இன்று 12.30 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகன பேரணி டென்மார்க் நாடாளுமன்ற முன்றலை வந்தடைந்தது.

பின்பு டென்மார்க் நாடாளுமன்ற முன்றலில் கூடிய டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள், ஈழவிடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தினர்.

கவனயீர்ப்பு ஊர்வலம், தேசியத்தலைவரின் படங்கள், தேசியக்கொடி மற்றும் தமிழினப்படுகொலையை பறைசாற்றும் பதாகைகளையும் தாங்கிய வண்ணம் உணர்வெழுச்சியுடன் “COVID 19” சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்த வண்ணம் நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு டென்மார்க் வெளிநாட்டமைச்சை வந்தடைந்தது.

அங்கு இறுதி நிகழ்வுகள் இடம்பெற்று தமிழினப்படுகொலைக்கான ஆதாரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் டென்மார்க் வெளிநாட்டமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாட்டு அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமிழ்தேசிய கட்சிகள் ,புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிணைவு - ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை நெருக்கடியான நிலையில் கொண்டுவந்திருப்பதை டென்மார்க் அரசு உணர்வதாகவும் ,அதனை உள்வாங்கி தங்களின் எதிர்கால நடவடிக்கைகள் ஈழத்தமிழர் நோக்கி அமையும் என அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை மீறல் ஆணையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர்களின் விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில், இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி