பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பயணித்த வாகனம் விபத்து
Sri Lanka Police
Ministry of Education
Sri Lanka Police Investigation
Madhura Sevevirathne
By Sathangani
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியாவிற்கு அவர் பயணித்தபோது நேற்று இரவு (22) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கித்துல்கல, கலுகொஹுதென்னவில் அந்த வாகனம் சறுக்கி, வீதியோரத்தில் இருந்த ஒரு மின் கம்பத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தின் போது வாகனத்தில் இருந்த பிரதி அமைச்சருக்கோ அல்லது ஓட்டுநருக்கோ எந்தக் காயமும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

எனினும், பிரதி அமைச்சர் பயணித்த வாகனம் கணிசமான சேதத்திற்கு உள்ளானதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் கித்துல்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி