முத்துநகர் விசாயிகளை ஏமாற்றும் பிரதியமைச்சர் : 39 நாளாக தொடரும் போராட்டம்
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
NPP Government
By H. A. Roshan
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்து 39ஆவது நாளாக சத்தியாக் கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் திருமலை மாவட்ட செயலகம் முன்பாக இன்றும் (25) குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு அடாத்தாக வழங்கப்பட்டதையடுத்து அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த நிலையில் குறித்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.
ஏமாற்றும் பிரதியமைச்சர்
இந்தநிலையில் விவசாயிகள் தங்கள் ஆதங்கங்களை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

இங்குள்ள பிரதியமைச்சர் ஒருவர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றார்.
விவசாய நீர்ப்பாசன குளங்களை அழித்தும், பொய்களை கூறி வருவதுதானா இவர்களின் சிஷ்டம் சேன்ஞ் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்