இன்று விசாரணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள தேசபந்து!
காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) முதல் தடவையாக விசாரணை குழுவின் முன் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசபந்து தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
குறித்த விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
நாடாளுமன்றத்தில் கூடிய குழு
இதற்கமைய தேசபந்து தென்னகோனை இன்று குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அவர் இன்றைய தினம் முதல் தடவையாக குழுவின் முன்னிலையில் முன்னிலையாகவுள்ளதுடன் குறித்த விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8இல் கூடவுள்ளது.
இந்தக் குழு கடந்த 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடி விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்துக் கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
