கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ministry of Education
G.C.E.(A/L) Examination
Education
By Independent Writer
உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
குறித்த விடயம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற் பாடத்துறை பிரிவு செயல்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும்
இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பாடப்பிரிவில் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்