தேசபந்துவின் முன் பிணை மனு : நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) முன் பிணை கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவிற்கு எதிராக எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில், எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டுப் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைவில் பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி இன்று (05) அறிவித்துள்ளார்.
முன் பிணை மனு
கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்களைக் கலைத்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபராக மனுதாரர் கைது செய்யப்பட்டால், பிணை வழங்க நீதிமன்ற உத்தரவைக் கோரி முன் பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கோரிக்கை தொடர்பான முடிவை இன்று (05) வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மனுதாரருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அஜித் பத்திரண, சட்டத்தரணி தரிந்து விக்ரமராச்சி மற்றும் ஆயிஷா கமகே ஆகியோருடன் முன்னிலையானார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் சார்பாக சிரேஸ்ட அரச சட்டத்தரணி ஆஸ்வால்ட் பெரேரா இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
