தென்னகோனுக்கு எதிராக பாய்ந்துள்ள குற்றச்சாட்டுகள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon), போகம்பர சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் வெளியில் இருந்து உணவு பெற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கமாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வெளியில் இருந்து உணவைப் பெற சம்பந்தப்பட்ட சிறைச்சாலையிடம் கோரிக்கை வைக்கலாம், அதன்படி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் 9 குற்றச்சாட்டுகள்
அதன்படி, இன்று (22) போகம்பர சிறைச்சாலைக்கு வெளியே இருந்து அவருக்கு உணவு வழங்க அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகம பகுதியில் உள்ள W 15 ஹோட்டலில் துப்பாக்கியால் சுட்டு குழப்பம் விளைவித்ததாகவும், காவல்துறை மா அதிபரின் கட்டளையில் சட்டவிரோத செயற்பாட்டுக்காக 8 காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
காவல்துறை அதிகாரிகள் குழுவுடன் சதி செய்தல்
மேலதிகமாக, தனிப்பட்ட லாபத்திற்காக குற்றவாளிகளை மிரட்டுவதற்காக காவல்துறை அதிகாரிகள் குழுவுடன் சதி செய்தல் மற்றும் பொய்யான ஆதாரங்களை உருவாக்குதல் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இதேவேளை தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


விடுதலைப் புலிகளை நேசித்த ஈழ அன்னையர்களின் குறியீடுதான் அன்னை பூபதி 22 மணி நேரம் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்