பதவி நீக்கம் செய்யப்ட்ட தேசபந்து தென்னகோன் உடனடியாக ஏற்படுத்திய மாற்றம்
தேசபந்து தென்னகோனை(deshabandu tennakoon) காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக இன்று (5) நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் பெறப்பட்டன, அதன்படி பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே,தேசபந்து தென்னகோன் தனது அதிகாரபூர்வ முகநூல் பதிவில் சீருடை அணிந்திருந்த முக்கிய படத்தை அகற்றி, அதற்கு பதிலாக டை கோட் அணிந்திருந்த புகைப்படத்தை இணைத்தார்.
முகநூலில் நீக்கப்பட்ட பதவி விபரங்கள்
மேலும், அவரது முகநூல் கணக்கின் தனிப்பட்ட தகவலின் கீழ் உள்ள பதவிகளின் அனைத்து விவரங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இதில் சிறப்பு என்னவென்றால், பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் 6 மாதங்களாக செயல்படாமல் இருந்த அவரது அதிகாரபூர்வ முகநூல் கணக்கு இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.தென்னகோன் காணாமல் போன முழு காலகட்டத்திலும் அவரது முகநூல் கணக்கில் எந்த செயல்பாடும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

