உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் புதிய காவல்துறைமா அதிபர்!
புதிய காவல்துறைமா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னகோன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (29) காவல்துறை தலைமையகத்தில் வைத்து பதவியேற்பு விழா இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 36வது காவல்துறைமா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டார்.
பதவி வெற்றிடம்
முன்னாள் காவல்துறைமா அதிபராக இருந்த சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து நிலவிய பதவி வெற்றிடத்திற்கு யாரையும் தெரிவுசெய்யமுடியாத நிலை நிலவியது.
இதற்கிடையே கடந்த, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பிரதி காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
யுக்திய தேடுதல் நடவடிக்கை
இதன்படி, அவர் இதுவரை அந்த பதவியை ஆற்றி வந்த நிலையில் நாட்டில் அண்மைய காலத்தில் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையும் இவரது தலைமையில் இடம்பெற்று வந்தது.
கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை காவல்துறையில் உதவி காவல்துறை அத்தியட்சகராக இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |