தேசபந்து தென்னகோனுக்கு எதிரான தீர்ப்பு : நெருக்கடியில் அரசாங்கம்
தேஷ்பந்து தென்னகோன்( (Deshabandu Tennakoon)) காவல்துறை மா அதிபராக செயற்பட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை பகிர்ந்து கொள்வதாக அமைச்சரவை அறிவித்துள்ளது.
ஆனால் அமைச்சரவையின் தீர்மானம் எவ்வாறாக இருந்தாலும் தேஷ்பந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு தீர்க்கப்படும் வரை அவர் காவலல்துறை மா அதிபராக பணியாற்ற முடியாது என முன்னாள் சட்டத்தரணிகள் சங்க தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ்(saliya pieris) தெரிவித்துள்ளார்.
தீர்ப்புக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது எனவும், அதனை புறக்கணிப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும் எனவும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) மற்றும் பங்குதாரர்களால் 09 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டநிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |