கல்வி அமைச்சின் இணையத்தளம் மீதான தாக்குதல் குறித்து வெளியான தகவல்
Ministry of Education
Sri Lanka
Hackers
Cyber Attack
By Sathangani
சிறிலங்கா கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல், உள்நாட்டு இணைய வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சைபர் தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக இணைய சேவை வழங்குநர்களிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை கணினி திடீர் பதிலளித்தல் ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தல்
இந்த விடயம் தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்று கல்வியமைச்சுக்கு இன்று(10) கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை (05) சைபர் தாக்குதலுக்கு இலக்கான கல்வி அமைச்சின் இணையத்தளமானது தொடர்ந்தும் செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்