உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின
ukraine
war
srilankan
By Sumithiran
உக்ரைனில் சுமார் 40 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உக்ரைனில் சிறியளவிலான இலங்கையர்கள் வசிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாகவும், சிலர் நாடு திரும்பியதாகவும் அவர் கூறினார்.
உக்ரைனில் உள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்ப துருக்கி தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்