இலங்கையின் கல்வித்துறை வளர்ச்சிக்கு சர்வதேசத்தை நாடும் ரணில்
இலங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோவின் கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற மொனராகலை புத்தருவகல மகா வித்தியாலய மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்காக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பட்ட கல்வி முறை நாட்டில் உருவாக்கப்பட்டு, இந்நாட்டு மாணவர்களுக்கு நவீன உலகத்துடன் முன்னேற வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் மொனராகலை புத்தருகல மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த போது மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் குறித்த பாடசாலையின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அதிபர் அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |