உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் இலங்கையும் ஒன்று
நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களில் உள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்யயுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.
நெடுஞ்சாலை அமைச்சில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறையின் ஊடாக எமது நாடு அதிக அளவில் அந்நிய செலாவணியைப் பெறுகிறது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். அனைத்தும் இலவசமாக அருகில் வரும் வரை காத்திருக்க முடியாது.
எமது நாடு மிகவும் அழகான நாடு. உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாக எமது நாடு காணப்படுகிறது.
நாம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டுமானால் தேவையான வசதிகளை வழங்க வேண்டும். இவை எங்களை பற்றி சிந்தித்து செய்யும் பணிகளல்ல. எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே செயற்பட வேண்டும்.
எனவே, சுற்றுலா வலயங்களில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.