நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய வேலைநிறுத்தத்தில் களமிறங்க அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தீர்மானம்
பல கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பாகப் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை என அதன் பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
பொதுச் செயலாளர் தம்மிக்க முனசிங்க
ஆனால், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமைப் பட்டியல் இல்லை.

தெளிவான பதவி உயர்வு முறைமையும் இல்லை.
தரங்களுக்கிடையிலான பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. உயர் தரம் ஒன்றும் இல்லை. அவர்களுக்கான பயிற்சிக் காலம் ஒரு வருடமாக இருந்தாலும், இதுவரை நிரந்தர சேவையில் உள்வாங்கப்படவில்லை.
அதேவேளை, பாரிய சம்பள முரண்பாடும் காணப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் எதற்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |