மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்த மன்னார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
மன்னாரில் ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐந்து ஆண்டுகள் ஆகியும் நியமனம் கிடைக்காத நிலையில் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(31) முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர் பணிக்காக அமர்த்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டதாரிகளை கவனத்தில் கொள்ளவில்லை
நியமனங்களை கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து இருந்தாலும் கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் குறித்த பட்டதாரிகளை கவனத்தில் கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் பணியை முன்னெடுத்து வருகிறார்கள்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இந்த நிலையில் இன்று புதன்கிழமை (31) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க கோரி கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை கையளித்துள்ளனர்.

இன்று (31) மன்னாரில் உள்ள சுமார் 170 க்கு மேற்பட்ட ஆசிரியர் பணியை முன்னெடுக்கும் பட்டதாரிகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மன்னார் அலுவலகத்தில் தமது கையெழுத்து அடங்கிய முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ரீ. எம். றாகித் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

