கோவில் உண்டியலில் கிடந்த ரூபா 100 கோடி காசோலை -மிரண்டுபோன நிர்வாகம்
கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் காணிக்கையாக ரூபா 100 கோடி காசோலையை போட்டிருப்பதை கண்டு ஆலய நிர்வாகத்தினரே மிரண்டுபோயுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை காணிக்கை எண்ணப்படுவது வழமையாகும்.இதேபோன்று நேற்றையதினமும் (23) கோவில் நிர்வாகத்தினர் காணிக்கையை எண்ணத் தொடங்கினர்.
ரூபா ஒரு கோடி காசோலை
A special place in hell is reserved for a guy called Radha Krishna. He deposited this Rs 100 crore cheque in a hundhi at the famous #Simhachalam Varaha Lakshmi Narasimha Swamy Temple.
— Krishnamurthy (@krishna0302) August 24, 2023
When temple investigated, bank said he only had Rs 17 balance in his account! #AndhraPradesh. pic.twitter.com/LXdGkH1YYY
இதன்போது பக்தர் ஒருவர் காணிக்கையாக ரூபா ஒரு கோடி காசோலையை போட்டிருந்தார். அதிலும், ‘வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம்’ என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பின்னர் அதை அழித்து 100 கோடி என்றும் எழுதப்பட்டிருப்பது தெரிந்ததும், அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த காசோலையில் எழுதப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை என்பது என தெரியவந்தது. மேலும் அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முழுமையான விவரங்களை எடுக்க கோயில் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.