யானையின் தாக்குதலில் மயிரிழையில் தப்பிய பக்தர்கள்(படங்கள்)
மாத்தறையில் இருந்து தந்திரிமலை நோக்கி பயணித்த யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அநுராதபுரம் - தந்திரிமலை வீதியில் ஓயாமடுவ, மணிங்கமுவ பிரதேசத்தில் நேற்று (30) இரவு தந்திரிமலை ரஜமஹா விகாரையில் வழிபாடு செய்துவிட்டு மாத்தறைக்கு திரும்பிச் சென்றவர்களின் பேருந்து மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பயந்து கூச்சலிட்ட யாத்திரிகர்கள்
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தாக்குதலின் போது பேருந்தில் இருந்த யாத்ரிகர்கள் மிகவும் பயந்து கூச்சலிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

பல உயிர்களை காவு கொண்ட யானை
இந்த யானை இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதியில் பயணித்த பல வாகனங்களை தாக்கியுள்ளதுடன், குறித்த யானை அப்பகுதியில் பல மனித உயிர்களை பலிகொண்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலையாளி யானையை அப்பகுதியில் இருந்து அகற்றுமாறு பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.