நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் இலங்கை வர்த்தகர் தம்மிக்க பெரேரா (நேரலை)
நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
இலங்கை வர்த்தகர் தம்மிக்க பெரேரா இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது தம்மிக்க பெரேரா ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.
பசில் ராஜபக்சவின் வெற்றிடம்
அரசியலமைப்பின் 99A (தேசிய பட்டியல்) உறுப்புரையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை வெற்றிடத்தையே நிரப்புகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், தம்மிக்க பெரேராவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர்வதற்கான அனுமதியை உயர் நீதிமன்றம் நேற்று பெரும்பான்மை தீர்ப்பில் நிராகரித்தது.
அதனையடுத்து, தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு நேரலை

