தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடே பொது வேட்பாளர்...!
தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடே பொது வேட்பாளர் என்ற விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் (Dharmalingam Suarez) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (03.09.2024) நடைபெற்ற தேர்தல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளர் என்பது ஒரு நாடகம் என்பதனை ஏற்கனவே கூறியிருந்தோம். இன்று அது ஒரு விழலுக்கு இறைத்த நீராகத்தான் காணப்படுகின்றது.
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் தேசமாக இந்த தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதை தேர்தலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து சொல்லி வந்திருக்கின்றோம்.
கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு, இந்த நாட்டில் இருக்கின்ற ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்ளை கீழ்வரும் காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |