தமிழரசுக் கட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காட்டம்!

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran P Ariyanethran Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Sep 03, 2024 01:24 PM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல என அக்கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்

களுவாஞ்சிகுடியில் இன்று (03.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இவ்விடையம் தொடர்பில் வட்டாரங்களிலுள்ள மக்கள் புத்திஜீவிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் எம்மை அடிக்கடி தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறான முடிவை எடுத்தீர்கள், கட்சி ஏன் இவ்வாறான முடிவுக்குச் செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் 24 வீத சம்பள அதிகரிப்பு : சஜித் உறுதி

தமிழ் பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றபோது சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு ஏன் வாக்களிக்கத் தூண்ட வேண்டும். என்ன அடிப்படையில் கட்சின் இந்த முடிவை எடுத்துள்ளது போன்ற கேள்விகளை கேட்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காட்டம்! | Criticism Over Itak Support To Sajith

அதற்கு பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளேன். அனேகமான மக்கள் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

எமது மக்கள் பொது வேட்பாளர் தொடர்பில் அவரை நூறுவீதம் ஆதரிக்க வேண்டும் என்ற செயற்பாட்டில் இருக்கின்றார்கள். இந்நிலையில் எமது கட்சி அங்கத்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஏன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என்பதை கட்சி மக்களுக்குத் தெழிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.

மாறாக அவ்வாறு எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று சஜித் பிரேமதாச  வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பார்களா என்பது கேள்விக்குறியாகும்.

போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம்: அரச ஊழியர்களை எச்சரிக்கும் வேலுகுமார் எம்.பி

போலியான எண்கணித வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம்: அரச ஊழியர்களை எச்சரிக்கும் வேலுகுமார் எம்.பி

தமிழரசுக் கட்சி

மக்களுக்காகத்தான் நாங்கள், எங்களுக்காக மக்கள் இல்லை. எனவே எம்மவர்களின் முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாச பாவம். இலங்கைத் தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள் அவருடன் இணைவதால் பெரும்பான்மை சமூகம் ஒரு மாற்று நடவடிக்கை எடுப்பதற்குரிய வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழரசுக் கட்சியின் முடிவு ஏற்புடையது அல்ல: முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் காட்டம்! | Criticism Over Itak Support To Sajith

அதனடிப்படையில் இது சஜித் பிரேமதாசவை தோற்கடிக்கும் ஒரு வியூகமாகவும் இருக்கலாம். ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தந்திரத்தில் சாத்தியவான்  இவ்வாறான திட்டத்தை வகித்திருக்கலாம்.

அதற்கு இவர்களும் துணைபோயிருக்கலாம் என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது. ஏனெனில் சஜித் பிரேமதாசவுக்கு என்ன காரணத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்பதை  இற்றைவரையில் யாரும் எந்த ஊடகத்திலும் சொல்லவில்லை.

எது எவ்வாறு அமைந்தாலும் எமது கட்சியைச் சேர்ந்த இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) சங்கு சின்னத்திற்கு மக்கள் அனைவரும் இம்முறை வாக்களித்து தமிழ் மக்களின் ஒன்றுமையை நிருபிக்க வேண்டும்." என்றார்.

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

சஜித்திற்கு எதிராக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்: முன்னாள் பிரதி அமைச்சர் சாடல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025