மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் டோனி
MS Dhoni
Chennai Super Kings
IPL 2023
By Sumithiran
இந்த ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி காயத்தால் அவதிப்பட்டுவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதிப் போட்டிக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் சிறு சிகிச்சைக்குப் பின்னர் அவர் இறுதிப் போட்டியில் விளையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோனி காலில் அறுவை சிகிச்சை
எனினும், மகேந்திர சிங் டோனி காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மும்பை மருத்துவமனையில் அனுமதி
அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், டோனி வரும் வாரத்தில் பரிசோதனைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
