தோனியின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி கண் கலங்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது ஐபிஎல் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார்.
எமோஷனலான தோனி
இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கிக் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில், ஆட்டம் பரபரப்பானது. எப்போதும் நிதானம் காக்கும் தோனி, அந்த நேரத்தில் பரபரப்பானது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கு பின் ஜடேஜாவை தூக்கிய போது திடீரென எமோஷனலான தோனியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற போது கூட தோனி, பெரிதாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால் 5ஆவது முறை ஐபிஎல் கோப்பை தோனிக்கு உணர்வுப்பூர்வமாக மாறியுள்ளது.
இதனால் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அடுத்த சீசனில் விளையாடுவாரா?
என்னதான் தோனி மீண்டும் அடுத்த சீசனில் விளையாட முயற்சிப்பேன் என்று கூறினாலும், விளையாட்டு வீரனின் இறுதி வெற்றிக்கு பின் வரும் கண்ணீரே தோனியின் கண்களில் இருந்து வந்ததாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.
இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது சந்தேகமே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் அன்புக்காக மீண்டும் விளையாட விருப்பம் இருக்கிறது. உடல் ஒத்துழைக்க வேண்டும் என்று தோனி கூறினார்.
ரசிகர்களின் ஆதங்கம்
“உடல் ஒத்துழைத்தாலும் அவர் அடுத்து விளையாட வரமாட்டார்.
தன் விளையாட்டுக் காலம் மொத்தத்திலும் எல்லா வித அழுத்தங்களையும் சோகம் சந்தோசம் விரக்தி அதிருப்தி என எதையும் வெளிக்காட்டாமல் அணிக்காக உள்ளுக்குள் புதைத்து புதைத்து வைத்த தலைவன் ஒருவன் தன் இறுதி ஆட்டத்தில் தான் எல்லா ஸ்திரங்களையும் கைவிட்டு உடைவான்.
இந்தக் கண்ணீர் சொல்லிவிட்டது இதுதான் அவரின் இறுதி ஆட்டம். ஒருவேளை சென்னை அணி தோற்று இருந்தால் அணி துவண்டுவிடக் கூடாதென திடமான ஒருவராகவே தன்னைக் காண்பித்துக் கொண்டிருந்திருப்பார். உணர்ச்சிமிகு தோனியை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.
இந்த வெற்றி அவரின் இத்தனை கால அழுத்தங்களை உடைத்து இலகுவாக்கிவிட்டது. இந்தக் கண்ணீர் இந்த ஒரு போட்டிக்கான கண்ணீர் மட்டுமல்ல” என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.