ஒரே திட்டத்தை வகுத்த தோனி காவ்யா - பரபரப்பை ஏற்படுத்திய ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் மினி ஏலத்திற்காக தோனி மற்றும் காவ்யா மாறன் ஒரே திட்டத்தை போட்டுள்ளதால் உச்சகட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ம் திகதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த வியூகங்களை வகுத்து வருகிறது.
தோனி vs காவ்யா

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் எம்.எஸ்.தோனி மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஆகிய இருவருமே ஒரே மாதிரியான திட்டத்தை போட்டுள்ளதால் ஏலத்தின் போது கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு காரணம் சகலதுறை வீரர்களின் தேவை அதிகரித்து தான் எனக்கூற வேண்டும்.ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரண் போன்ற பெரிய வீரர்களை விடுவித்து, இருப்பதால் அதிக தொகையை (ரூ. 42.2 கோடி) வைத்துள்ளது.
அந்த அணியின் துடுப்பாட்ட வரிசையில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மர்க்ரம், வாஷிடங்டன் சுந்தர் என நடுத்தர நிலை வரை சிறப்பாக உள்ளது.
போட்டி நிறைவு செய்யும் இடத்தில் அப்துல் சமாத் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் பின்னணி இடத்தில் ஆடுவதற்கு வீரர்கள் இல்லை.
சாம் கரணுக்கு குறி

எனவே அந்த இடத்தை நிரப்புவதற்காக இங்கிலாந்து அணியின் சாம் கரணுக்கு குறி வைத்துள்ளது. இவர் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பெற்றார்.
மேலும் சாம் கரணுக்கு வயது குறைவு என்பதால் நீண்ட காலத்திற்கு பயன்படுவார். தோனியும் சாம் கரணுக்காக பெரும் தொகையை இறக்க திட்டமிட்டுள்ளார்.
டுவைன் பிராவோ ஓய்வு பெற்றுள்ளதால், அவரின் இடத்தை நிரப்ப நீண்ட கால வீரராக சாம் கரண் தேவை. ஏற்கனவே அவர் இரண்டு தொடர்ககளில் சிஎஸ்கேவுக்காக விளையாடி இருப்பதால், அணி வியூகங்களை நன்கு அறிந்தவர். எனவே அவரை ஏலம் எடுக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி கூறியிருப்பதாக தெரிகிறது.
யார் வெற்றி பெறுவார்

ஐதராபாத் அணியில் காவ்யா மாறனின் ஏலம் முறையை பார்ப்பதற்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.
இதே போல சிஎஸ்கேவும் பெரும் முயற்சிகளில் ஈடுபடும் என்பதால் தோனி vs காவ்யா மாறன் என்ற போரில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்