டயானா கமகே வழக்கின் தீர்ப்பு - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம். ஏ. ஆர். மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தீர்ப்பை ஜூலை 25 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பிரதிவாதிகள்

இந்த மனுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பிரித்தானியப் பிரஜை எனக் கூறப்படும் டயனா கமகே
இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத்
தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல
ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.