வடக்கிற்கு விரையும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்: வேலைவாய்ப்புகள் தொடர்பில் ஆளுநரின் எதிர்பார்ப்பு

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Dhilak Jan 24, 2025 12:16 PM GMT
Report

தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றதாகவும் அதன் ஊடாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் (N.Vedanayagam) குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “30 ஆண்டு காலப் போர் காரணமாக வடக்கு மாகாணம் பலவற்றை இழந்துள்ளது, தொழில்துறை, வேலை வாய்ப்பு என்பனவும் அதனுள் அடங்குகின்றன, எமது பகுதியைப் பொறுத்தவரையில் அரசாங்க வேலை மாத்திரமே இருந்து வந்தது.

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி!

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி!

முதலீடு 

போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து இங்கு முதலீடு செய்வதற்கு பலர் வந்தாலும் அவர்களில் பலர் திரும்பிச் சென்றுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் முதலீடு செய்யவில்லை.

வடக்கிற்கு விரையும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்: வேலைவாய்ப்புகள் தொடர்பில் ஆளுநரின் எதிர்பார்ப்பு | Diaspora Investors Towards The Northern Province

ஆனால் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் சூழல் மாறியுள்ளது. முதலீட்டாளர்கள் இங்கு வருகின்றார்கள். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக முதலிட விரும்புகின்றனர்.

போருக்கு முன்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்குச் சென்றனவோ அதேபோல மீண்டும் நிலைமை ஏற்படும் சூழல் தெரிகின்றது.

பொருளாதார மேம்பாடு

விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் எமக்கு அதிகரிக்கின்றன, இதன் ஊடாக எமது பகுதியைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கிற்கு விரையும் புலம்பெயர் முதலீட்டாளர்கள்: வேலைவாய்ப்புகள் தொடர்பில் ஆளுநரின் எதிர்பார்ப்பு | Diaspora Investors Towards The Northern Province

அதேபோன்று தொழில்நுட்பங்களை நவீன இயந்திரங்களையும் எமது உற்பத்திப் பொருட்களையும் பெருக்குவதற்குப் பயன்படுத்தவேண்டும்.

சகல வழிகளிலும் சாதகமான சூழல் நிலவும் நிலையில் அதனைப் பயன்படுத்தி எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.” என்றார்.

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026