பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்விக்கு கரம்கொடுக்கும் புலம்பெயர் உறவுகள்
டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த சிறுவர்களின் கல்வி மற்றும் நலன் மேம்பாட்டிற்காக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சுடன் இணைந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான சந்திப்பு பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன (Namal Sudarshana) தலைமையில் நடைபெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசின் முதன்மையான இலக்கு
அதற்கமைய, அமைச்சின் முழுமையான கண்காணிப்பின் கீழ், பெற்றோரை இழந்த சிறுவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்க தயாராக இருப்பதாக அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனர்த்த சூழ்நிலைகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நிரந்தர நிதி அமைப்பின் அவசியம் குறித்தும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே அரசின் முதன்மையான இலக்கு எனவும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |