டிக்கோயா இரட்டை படுகொலையாளி! காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரின் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வரும் சந்தேகநபர், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகள் உண்மையல்ல எனவும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, கைது செய்யப்பட்டிருந்த இந்த சந்தேகநபர் திடீர் நோய்வகை காரணமாக நேற்று (27) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தபோது அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், இதுவரை தலைமறைவாகவே உள்ளதாக தெரியவருகிறது.
பரவி வரும் செய்திகள்
இந்த நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகளை மறுத்துள்ள காவல்துறையினர், தப்பியோடியதன் பின்னர் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.

ஹட்டன் - டிக்கோயா நகர பகுதியில் உள்ள கடை ஒன்றில் வசிந்து வந்த வயோதிப தம்பதியொன்று, கடந்த வெள்ளிக்கிழமை (22) கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |