ரணிலுக்கு உதவி செய்த மருத்துவர் ருக்ஷான் பெல்லானா! வெடித்தது புதிய சர்ச்சை
ரணில் தனக்கு உதவி செய்ததற்கு பிரதியுபகாரமாக அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லானா உதவி செய்தாரா என்ற வகையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று கொழும்பில் வெடித்துள்ளது.
இது தெடார்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆரோக்கியமாக செல்லும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் குற்றப்புலனாய்வுப்பிரிவிற்கு செல்கின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்கின்ற போதும் ஆரோக்கியமானவராகவே செல்கின்றார்.
ஆனால் நீதிமன்ற உத்தரவின்பின் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ரணிலின் நோய்களை பொதுவெளியில் ஏன் வெளியிட்டார் மருத்துவர்
தற்போது விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பில் பலரும், ஊடகங்களும் சந்தேகங்களை கிளப்பி, ரணில் என்ற நோயாளியின், நோய்களை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் ஏன், பொது வெளியில் குறிப்பிட்டாரென கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் கடந்த 23.01.2023 அன்று மருத்துவர் ருக்சான் பெல்லனவை 2 மணிநேரம் அலுவலகத்தில் பூட்டி வைத்தனர். இதையடுத்து அவர் சுகாதார அமைச்சுக்கு இடமாற்றம் செய்ய அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தீர்மானித்தார். எனினும் அந்த தீர்மானத்தை தடுத்துநிறுத்தி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக அவரை தொடர அப்போதைய ஜனாதிபதி ரணில் உத்தரவிட்டிருந்தார்.
ரணிலின் இந்த உதவிக்கு கைமாறாக தற்போது பிரதிப்பணிப்பாளர் பெல்லானா உதவி செய்தாரா என்ற வகையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
