ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை...! சர்ச்சைக்குரிய வைத்தியர் வெளியிட்ட புதிய தகவல்
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உடல்நிலை காரணமாக தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேற முடியும்.
இருதய அறுவை சிகிச்சை
ஆனால், ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதும், தொடர்ந்து சிகிச்சை பெறுவதும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முடிவைப் பொறுத்து உள்ளது.
எவ்வாறிருப்பினும், ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றுவது குறித்து வைத்தியர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இதேவெளை ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன நேற்று (27.08.2025) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

