கொழும்பில் அவசரமாக கூடும் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (28) மாலை 5 மணிக்கு நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் (G. L. Peiris) இல்லத்தில் குறித்த கூட்டம் நடைபெற உள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றுநிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
ரணிலின் கைது
அத்துடன் எதிர்க்கட்சியை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபடுவதற்கும் முன்னோடித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் அடக்குமுறையான முறையில் நகர்ந்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது மற்றும் அதன் பின்னர் எழுந்துள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து இன்று விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
