மங்கள சமரவீர உயிரிழந்தாரா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நளின் பண்டார
Corona
SJB
SriLanka
Nalin Bandra
Mangala Samaeaweera
By Chanakyan
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள சமரவீர, தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், மங்கள சமரவீர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளன.
இவ்வாறு பகிரப்படும் செய்தி உண்மை இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி