நுண்ணுயிர் ஊசியால் சிறிலங்காவில் ஏற்பட்ட மற்றுமொரு மரணம்
கேகாலை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு நுண்ணுயிர் ஊசிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் திகதி கேகாலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஊசி செலுத்தியதன் பின்னர்

இந்நிலையில் நுண்ணுயிர் ஊசி செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குறித்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய ஊசி குறித்த நபருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை களுத்துறை - நாகொட போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.