பாடசாலை ஒன்றில் மரம் வீழ்ந்து 5 வயது மாணவன் பலி: இருவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Sri Lanka
Death
By pavan
கண்டி கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 5 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் 02 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தின் காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையில் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி