பட்டாசு கொழுத்தி,கைதட்டி டீசல் பவுசரை வரவேற்ற மக்கள்(காணொலி)
srilanka
people
fuel
shortage
By Sumithiran
தங்காலை, மஹாவெல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு இன்று பிற்பகல் டீசலை ஏற்றிய பௌசர் வந்த போது, அங்கு காத்திருந்த வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை அளித்தனர்.
பட்டாசு வெடித்தும், கைதட்டியும், ஆரவாரம் செய்தும் மக்கள் டீசல் பவுசரை வரவேற்றனர்.
பெட்ரோல் நிலையத்தில் டீசல் பெறுவதற்காக சுமார் 12 மணி நேரம் வரிசையில் நின்றதாக சிலர் தெரிவித்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். சிலர் டீசல் வரிசையில் நின்று சாப்பிட்டுக் கொண்டுமிருந்தனர்.
