எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Sri Lanka Fuel Crisis
By Sumithiran Jan 23, 2025 10:41 AM GMT
Report

சபுகஸ்கந்த(Sapugaskanda) காவல் பிரிவின் மாபிமா பகுதியில் மண்ணெண்ணெய் கலந்த டீசல் எரிபொருளை விநியோகிக்கத் தயாராக இருந்த எரிபொருள் பவுசர் ஒன்று நேற்று முன்தினம்(21)மதியம் கைப்பற்றப்பட்டதாக கிரிபத்கொடை(Kiribathgoda) காவல்துறை தெரிவித்துள்ளது.

கிரிபத்கொட காவல்துறையினருக்கு கிடைத்த அவசரத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பில், ஹங்வெல்ல, எம்புல்கம பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மண்ணெண்ணெய் கலந்ததாக சந்தேகிக்கப்படும் டீசல்

மண்ணெண்ணெய் கலந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐயாயிரம் லீட்டர் டீசல் எரிபொருளைக் கொண்ட எரிபொருள் பவுசர், ஒரு தண்ணீர் மோட்டார், எரிபொருளைக் கலக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு அடி நீள பிளாஸ்டிக் குழாய், தொண்ணூறு அடி நீளமுள்ள ஒரு மூன்று பிளக் சொக்கெட்டுகள் கொண்ட கம்பி மற்றும் ஒரு தீயை அணைக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய சிலிண்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம் | Diesel Fuel Bowser Mixed With Kerosene

கலப்பு எரிபொருள் விநியோகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு இந்த கலப்பு எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

எரிபொருளில் இடம்பெற்ற பாரிய கலப்படம் அம்பலம் | Diesel Fuel Bowser Mixed With Kerosene

எரிபொருள் பவுசரில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பகுப்பாய்வு அறிக்கைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உள்ளன, மேலும் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் எரிபொருள் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த தகவல்கள் பெறப்பட உள்ளன.

கடமை நேரத்தில் மதுபோதையில் தூங்கி வழிந்த காவல்துறையினர் : ஆரம்பமானது விசாரணை

கடமை நேரத்தில் மதுபோதையில் தூங்கி வழிந்த காவல்துறையினர் : ஆரம்பமானது விசாரணை

அர்ச்சுனா எம்.பி மீது பாயும் சட்டம் : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நகர்வு!

அர்ச்சுனா எம்.பி மீது பாயும் சட்டம் : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நகர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026