டீசலின் விலை மேலும் 120 ரூபாவால் அதிகரிக்கும்?
price
fuel
increase
diesel
cpc
By Sumithiran
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) டீசல் லீற்றர் ஒன்றிற்கு 120 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள போதிலும், டீசலின் விலை 55 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் அதிகரித்த எரிபொருள் விலையேற்றமானது பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தையே ஈடுகட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், டீசல் இழப்பை ஈடுகட்ட, 120 ரூபாவால் லீட்டர் ஒன்றின் விலையை உயர்த்த வேண்டும்.
தொடர்ந்தும் பழைய விலையில் எரிபொருளை விற்பனை செய்திருந்தால் இம்மாதம் 26 பில்லியன் ரூபா நட்டத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சந்தித்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி