வேலுகுமார் மீதான தாக்குதல் முயற்சி: நடந்தது என்ன : திகாம்பரம் விளக்கம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்(velu kumar) மீதான தாக்குதல் முயற்சிக்கு அவர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் தான் கோபமடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம்(palany thigambaram) கூறினார்.
இருவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். வேலு குமார் சமீபத்தில் அதிலிருந்து விலகி, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்தார், அதேசமயம் திகாம்பரம் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறார்.
பொய்யான குற்றச்சாட்டு
“ வேலு குமார் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதால் நான் கோபமடைந்தேன். பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது உண்மையான மக்கள் நிதானத்தை இழக்கின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம்
இதேவேளை, இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன். “இது சில ஆர்வமுள்ள தரப்பினரால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம் என குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரடி அரசியல் உரையாடல் நிகழ்ச்சியின் போது, எம்.பி.க்கள் வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோர் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |