தியாகதீபம் திலீபனின் மூன்றாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (17.09.2023) ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
உணர்வுபூர்வமான நினைவேந்தல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி.அபிரக்சனின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெ.அருண் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் ஆகியோரது பங்குபற்றுதல்களுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.











ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 15 மணி நேரம் முன்
