பதவி விலகல் விவகாரம்! மகிந்தவின் முடிவை அறிவித்தார் தினேஷ் குணவர்தன
பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என மகிந்த தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமர் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் எனவும், அதில் தமது பதவி விலகல் குறித்த அறிவிப்பும் அடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
எனினும் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதில் இருந்து பிரதமர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        